செ.புனிதஜோதி கவிதை

காற்று
கரம்பிடித்து
அழைத்து வந்து
சாளரம் வழியே
இறக்கிவிட்டுச்செல்கிறது

அதன் கதையை
வரைந்து கொண்டிருக்கிறது
வரைந்த ஓவியத்தில்
நகர்ந்து நகர்ந்து
இழுத்துச்செல்லும்
மேகத்தைக் கண்டேன்

குறி பார்த்திறங்கும்
பறவையின்
கூரிய விழிகளையும்
சிறகையும் கண்டேன்

வீட்டிற்குள்ளே
வந்திருப்பது
மழை மட்டுமல்ல
அதன் கூட்டாளியான
வானமும்.