எல்.ரகோத்தமன் மூன்று கவிதைகள்   

1) தவிப்பு
 
  முள் வேலியில்
  சிக்கித் தவிக்கும்
  அவ் வெண்ணிற சேலை
  யாரிடமோ உதவி கேட்டு
  காற்றில் படபடத்து
  துடிக்கிறது!              

 
  06-10-2023
                 
 
2)  கீறல்கள்
 
  கௌரவம் – அந்தஸ்து
  முட்கிரீடத்தின் முட்கள்
  தினம் தினம்
  கீறும் கீறல்களில்
  வாழ்வின் துளிகள்
  நீர்குமிழி போல்
  காணாமல் போகிறது !

 
  06-10-2023

                   
 
3)  பனித்துளி
 
  புல் வெளியில்
  பூத்த பனித்துளி
  மறைவதற்குள்
  பனியின் ரகசியம் காண
  பூக்களை நாடுகிறது
  பட்டாம்பூச்சிகள் !

 
  06-10-2023