
புதுவரவே, புத்தொளியே
கதிர்
வரவுபோல் வந்தாய்.
கண்ணியம் காத்து கடமை
புரிய
கணமும் தவறமாட்டாய்.
நீ வருவாய் என நான்
நினைக்கவில்லை,
இப்போது
பழகிவிட்டேன் சமநிலை.
செல்வந்தர் கரங்களில்
நீயிருந்தால்
செழிப்பில் சிங்காரமாய்
மாறியிருப்பாய்.
சொல்வதற்கில்லை அடுத்த
வேளை
கஞ்சிக்கு அல்லாடுபவர் சிலர்
பையிலும்
அழகான உடைகள் உனக்குண்டு.
கந்தலாடை அணிபவரோ, பட்டாடை
உடுத்தவரோ
கொடியவரோ,கோமாளியோ
உன்வரவு
சுகம்தான் அவருக்கு.
என் எண்ணங்களுக்கு
உயிரூட்டி
உலவ விட உன்னை விட்டால்
யாருமில்லை !
புதிய அலைபேசியே !.
கலை பயின்ற உனை
விலை
பேசி வாங்கி வந்து திடீரெனத்
தந்தார்
சிலை ஆனேன் நான்.
