அழகியசிங்கர்/ரோஜாப் பூ

கடைக்குச் சென்றேன்
பழம் வாங்க
பூக்கடையில் ரோஜாப்பூ
பார்த்தவுடன்
அம்மா ஞாபகத்தில் வந்தாள்
அவள் ஞாபகமாய்
ரோஜாப்பூ அதிகமாய்
வாங்கினேன்
வீட்டிற்கு வந்தவுடன்
ரோஜாப்பூவை
மனைவியிடம் கொடுத்தேன்
ஆனால் அம்மாவைப் பற்றி பேசவில்லை