பரவசம் என்பது பார்ப்பது/கலைச்செல்வி


சரளைமண் தோட்டத்தின்
ஒரு ஓரத்தில்
பூத்துக்
குலுங்கிக் கொண்டிருந்தது
அடர் சிவப்பு நிறத்தில் போகன்வில்லாச் செடி ஒன்று

எப்போதோ யாரோ நட்டிருக்க வேண்டும்
அது அப்போதிலிருந்தே தான் துளிர்க்கத் தொடங்கியிருக்க. வேண்டும்

சட்டென்று யார் கண்ணிலும் படாத இடம்தான் அது
அது போலவே சட்டென்று
யாரும் ரசிக்க முடியாததும் கூடத்தான்..

ரசிக்காவிட்டால் என்ன.? பார்க்காவிட்டால் என்ன.?
பூத்துக் கிடத்தல் ஒன்றும் பாவமில்லையே.?

பூப்பது என்பது ஒரு வரம்
பூத்துக்கிடப்பது என்பது
அந்த வரத்தின் அற்புதம்
எனக்குத் தெரிந்தது இதுதான்..


9.10.2023