
தயங்கிக் கொண்டே இருக்காதே
தட்டிப்பறித்து விடுவார்கள்
உன் வாழ்க்கையை.
மண்புழு என்றும் மாளிகை தேடாது சாக்கடையில்
தான் வாழும்.
சொற்ப காசுக்கு உன்னை
அடகு வைக்காதே
விலங்காக்கி விடுவார்கள்
உன் விசுவாசத்தால்.
நாணலைப் போல்
வளைந்து கொடு

என்று வேண்டுமானாலும்
மாற்றம் நிகழலாம்
உன் மீது நம்பிக்கையிருந்தால்
புறப்படு நண்பா
உனக்காக எத்தனை பாதைகள்
எட்டுதிசையிலும்..
