தோட்டம்/பி. ஆர். கிரிஜா

எங்கள் வீட்டுத் தோட்டம்
அழகாய் மிளிரும் தோட்டம்
வெண்டை, புடலை. கத்திரி, மிளகாய், பூசணி, நெல்லி, அவரை, துளசி, முல்லை, மல்லி, ரோஜா, செவ்வந்தி அனைத்தும் செழிக்கும் எங்கள் தோட்டம்
காலை மாலை இரு வேளை அன்பாய் அம்மா நீர் பாய்ச்ச
சுட்டிப் பெண்ணும்
எரு போட
மலர்ந்து பூக்கள்
சிரிக்கையிலே
கனியும், காயும்
மகிழ்ந்தாட
குட்டிப் பையன்
குறும்புடனே
செல்லமாய் அதனுடன் உரையாட
வாசனை பரவும்
எங்கள் தோட்டம்
அழகாய் மிளிரும்
எங்கள் தோட்டம் !


9/10/2023