சுழற்சி/சிறகா

.

சுழன்று சுழன்று
சுழலும் வீச்சில்
காணாது போம்

கண்டறிந்தது காணாதது என

வகை வகையாக
பிரித் தறிந்து

சுத்திகரிக்க ப்படும்
இதயத்தில்

அன்பின் ஊற்றில் பெருகும்
வாழ்வின் பயணத்தில்

இருளை ஊடுருவி
மின்னும் ஒளித்துகள்களாலான

வசந்த மலர்களின் வாசம்.

.