தெற்கு/போர்ஹெஸ்

தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

உனது உள்முற்றத்திலிருந்து தொன்மையான நட்சத்திரங்களைப் பார்த்தேன் என்பது நிழல்களின் இருக்கையிலிருந்து ஓளிச் சிதறல்களைப் பார்த்தேன் என்பது எனது அறியாமையை விலக்கி விண்மீன் தொகுதிகளுக்கு ஒரு பெயரையோ, அவற்றின் இடங்களையோ அறியத்தரவில்லை நீர்த்தொட்டியில் தண்ணீரின் இசைக்குறிப்பை கேட்டது மல்லிகையின், தேனுறுஞ்சியின் வாசனைகளை நுகர்ந்தது தூங்கும் பறவையின் மௌனத்தை, நுழைவாயிலின் வளைவை, ஈரப்பதத்தை, தெரிந்திருந்தது -ஒருவேளை இவ்விஷயங்களே கவிதை.