வளவ. துரையன்/புளியமரம்

அம்மா சொல்வாள்
குளக்கரை மரப்புளி
தித்தித்து வழியும்

ஆடுமாடு மேய்ப்போர்க்கு
அமர்ந்துறங்க நெடும்பந்தல்

வயல்வேலைப் பெண்களின்
குழந்தைகள் உறங்கத்
தூளிகட்டும் மிளாறுகள்

நீரில்லாக் கோடையிலும்
நிமிர்ந்தங்கே குளிரூட்டும்

எல்லாம் சரிதான்
எனக்குப் பிடித்திருந்தது
கோடி வீட்டு இந்திரா
மஞ்சள் தாவணியில்
தொங்கும்வரை

One Comment on “வளவ. துரையன்/புளியமரம்”

Comments are closed.