ஈரோடு தமிழன்பன்/யார்வருவீர்கள்

மயானமாலை
கட்டுபவன்
முகவரிதெரிந்தோ தெரியாமலோ என்வீட்டுத்
திண்ணைக்கு வந்துவிட்டான்
வாழ்வின் பயணத்தில்
கைகொடுக்கமுடியாதவன்
எதற்கு வந்தான் இப்போது
அவனை
வெறுங்கையோடுஅனுப்புவதா
தெரியவில்லை;
அவனோடு
அந்தி கலவாத சொற்களோடு
கொஞ்சம்பேசவேண்டும்;

என்னுடன் யார் வருவீர்கள்?

திகைத்து நிற்கிற வானம்
தீர்மானிக்தாத
திசையில்
எனக்குச் சிலதடுமாற்றங்கள்;
இருந்தாலும் என்னசெய்ய?
புறப்படும் நேரம் வந்துவிட்டது;

என்னுடன் யார் வருவீர்கள்?

காணப்படாத
கனவுத்தொகுதியைத்
தூக்கத்தின் துளைகளில்போட்டு
மூடிவிட்டேன்
அடர்ந்த இரவுகளில்
என்னைத் தூக்கிகொண்டுபோகக்
காலத்தின் தூதன்
கையில் கடிதத்தோடு
வந்துவிட்டான்
பேசவேண்டும்அவனோடு;

என்னுடன் யார் வருவீர்கள்?

பொருண்மை
முடிவு செய்யாத…. சொற்கள்
வரப்போவதாய்ச்சொல்லாமலே
என் மனத்துள் வந்துவிட்டன
அதற்குள்
கவிதை யைத்தேடிப்போன
சொற்கள்
காணாமற்போய்விட்டன
இனிஎன்ன செய்ய…
கவிதையைத்தேடுவேனா?
பொருண்மைமுடிவான
சொற்களைத்தேடுவேனா?

என்னுடன் யார் வருவீர்கள்?