கலாவதி பாஸ்கரன்/பூக்களின் பொறாமை

இந்த செப்டம்பர்
கனடா விஜயம் !
விமான நிலையத்திலிருந்து
வீடு செல்லும் வழியில்
எங்கு நோக்கினும்
பச்சை பசேல் மரங்கள்,
வெள்ளை, மஞ்சள், ஊதா, சிகப்பு,
வெளிர் ஆரஞ்சு, பிங்க் அனைத்து
வண்ணங்களிலும்
அழகு பூச்செடிகள்,
பார்த்த கண்கள் பரவசப்பட்டன.
இயற்கைக்கு இறைவன் தந்த வரம்.
கடந்தன இரண்டு வாரங்கள்
குளிர் காற்றின் தாக்கம் ஆரம்பிக்க,
சாலை எங்கும் ஸ்வெட்டர்
அணிந்து நடக்கத்
துவங்கிய மனிதர்கள் ,
வாக்கிங் சென்றபோது,
மரங்களின் இலைகள்
பசுமை மாறி, வெளிர் மஞ்சள்
மற்றும் ஆரஞ்சு நிறம்
கொண்டு மனம் கவர்ந்தது.
வண்ணப் பூச்செடிகள் ஆங்காங்கு
சிதறி காட்சி அளித்தன,
சென்றன மேலும் சில வாரங்கள்.
கடும் குளிர் துவங்க,
மரங்களின் இலைகள்
ஆழ் மஞ்சள், சிவப்பு, பிங்க் என
பல வண்ணங்களைக் கொட்டி
போட்டி போட்டு வண்ணங்கள
வாரி இறைத்தன.
கொள்ளை அழகுடன்
கண்களைப் பறித்தன.
ஃபால் கலர்களாம்
அதற்குப் பெயர்
அந்த நாட்டில்.
ஆனால், கலர் கலராய்
நேற்று பூத்துக்
குலுங்கிய பூச்செடிகள்
பூமிக்குள் வெட்கப்பட்டு
புதைந்தன.
தங்களைப் போல
பல வண்ணங்களை கொட்டும்
மரங்கள் மேல் கொண்ட
பொறாமையோ?

One Comment on “கலாவதி பாஸ்கரன்/பூக்களின் பொறாமை”

Comments are closed.