
விடாமல் தொடரும்
மழையில் நனைந்தபடி
சாலையில் பயணிக்கிறேன்.
என்னை நனைத்து
நீ நானாகவும்
நான் நீயாகவும்
மாறிப்போன அழகிய தருணம் அது.
மழையாக நடந்துசெல்வதில்
அத்தனை
குளுமை
வானத்தின் அடர்த்தி
பறக்கும் பறவையின் தோற்றம்
உருவமற்ற காற்றின்
உருவம் அத்தனையும்
தந்துசெல்லுகிறாய்
என்னிடத்தில்
எடுத்துச்செல்வதற்கு
என்ன இருக்கிறது?
துக்கம்,
வஞ்சனை,
பொறாமை,
ஏக்கம்,
தவிப்பைத்தவிர.
நீ மழை
நான் பிழை
என்னைத் திருத்தி
மழை செய்.
