ஏமாற்றும் சீட்டு விளையாட்டு/போர்ஹெஸ்



தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
———

நாற்பது சீட்டுகள் வாழ்க்கையின் இடத்தை எடுத்துக்கொண்டிருக்கின்றன
அலங்கரிக்கப்பட்ட அதிர்ஷ்ட தாயத்துகள்
நமது விதியை உணர்ந்தறியாதவாறு வைத்திருக்கின்றன
ஒரு ஆய்ந்தமைவில்லாத விளையாட்டு
நம்மிடமிருந்து திருடப்பட்ட நேரத்தை
ஆக்கிரமித்து
வீட்டில் செய்த புராணங்களின்
அலங்காரங்களால் செழிப்படைய வைத்திருக்கிறது
மேஜையின் எல்லைக்குள்
மற்றவர்களின் வாழ்க்கை இயங்காநிலையை அடைந்துவிடுகிறது
விளையாட்டினுள் ஒரு அந்நிய நாடு இருக்கிறது
அதன் மேல் கீழ் ஏலம் கோருதலும் அதன் ஏற்புகளும்
இஸ்பேட் உச்சமதிப்பு ஒற்றை உருவரைவின் ஆதிக்கமும்
டான் ஜுவான் மேனுவலைப்* போல எங்கும் நிறைந்திருக்கின்றன
ஏழு டைமண்ட் சீட்டுகள் எதிர்நோக்கும் நம்பிக்கையின் மென் அதிர்வொலிகளாயிருக்கின்றன.
கபடமான மெதுவே ஆடுதல்
சொற்களைத் தடுத்து வைத்திருக்கிறது
விளையாட்டின் கணிக்க முடியாத கதிகள்
தங்களைத் திரும்பத் திரும்ப செயல்படுத்த
அந்த மாலை நேரத்தில் விளையாடுபவர்கள்
தொன்மையான ஏமாற்றுக்களை மீண்டும் நிகழ்த்துகிறார்கள்.
அந்த செயல் பல தலைமுறைகளான நம் முன்னோர்களை
யார் பியூனஸ் ஐரிசின் ஓய்வு நேரத்தை இப்படியாக உயிலளித்தார்களோ அவர்களை
மங்கலாக உயிர்ப்பிக்கிறது

டான் ஜுவான் மானுவெல்- அர்ஜெண்டினாவின் சர்வாதிகாரி- (1793-1877)

One Comment on “ஏமாற்றும் சீட்டு விளையாட்டு/போர்ஹெஸ்”

Comments are closed.