பானுமதியின் இரு கவிதைகள்

( 13/10/23 அன்று படித்த கவிதைகள்)

ஊதல்

நாலு வயதிருக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தை.
குடுகுடுவென என் இல்லத்தில் நுழைந்தது.
கழுத்தில் கயிற்றில் தொங்கும் புதிய ஊதல்
என் எதிரே நின்று பலமாக ஊதி ‘நில்’ என்றது.
நான் அசையாமல் நிற்க துள்ளிக் குதித்தது.
பின் வலது புறம்போ என்று சைகை காட்டியது.
என் மனதில் குறுக்கும் நெடுக்குமாய் எப்போதும் ஓடும் எண்ணங்களை நிறுத்த
ஒரு விசிலைத் தேடுகிறேன்.


2. குறும் பூக்கள்

வாய்க்காலின் குறுக்குப் பகுதி
வானவில்லின் வண்ணங்களாய், அவற்றின் கலவையாய் குறுகிய பாதையில் சிரிக்கும் சிறு பூக்கள்.
குத்துச் செடியாய் இருந்தால் கூட பூக்கள் மிதிபடாது.
வளர்ந்த மரத்தின் ஒய்யாரப் பூக்களுக்கு இந்தk கதி இல்லை.
குறுகிய பாதையில் படர்ந்தும் காலில் மிதிபட்டும், எப்படித்தான் வண்ணமாய் சிரிக்கின்றன?
அது எனக்கு செய்தி ஒன்று சொல்கிறதோ?