
முதலில்
தேநீர் கோப்பை உடைந்தது
பிறகு
டீவி ரிமோட் உடைந்தது
ஸ்விட்ச் போர்டு உடைந்தது
செல்போன் உடைந்தது
ஒரு நாள்
முகம் காணும் கண்ணாடி உடைந்தது
இன்னெரு நாள்
மதிப்புமிக்க பரிசொன்று உடைந்தது
அடிக்கடி
சட்டிப் பாத்திரம் உடைந்தது
நேற்று
மாறிமாறி மண்டை உடைந்தது
ஓர் உறவை உடைப்பதற்கு பதிலாய்
இன்னும்
எதையெல்லாம் உடைப்பீர்கள்?
_
