
இன்று
எங்கள் வீட்டில் கொலு
நான் துரும்பை எடுத்துப்
போடவில்லை
எல்லாம் அவள்
பார்த்துக் கொண்டாள்
பிள்ளையார் பொம்மை அதிகம்
பாபா பொம்மைகள்
இரண்டு
சிவன் பெருமாள் இல்லை
செட்டியார் பொம்மைகளின்
ஆதிக்கம் உண்டு
துணிச் சுற்றி மரப்பாச்சி
பொம்மைகளின்
இல்லாமலில்லை
மகாகவி பாரதியாருக்கும்
இடம் உண்டு
எப்படியாயிருந்தால் என்ன
சுவையான சுண்டல்
தினமும்
வேண்டும்
