இஸ்லாம்/சீவ.தீனநாதன்

(ரமண விருந்து என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது)

முஸ்லீம் அன்பர்கள் சிலர் ஒரு நாள் திடீரென ரமணாஸ்ரமத்திற்கு வந்தனர். பகவான் ரமணரை தரிசன ஹாலில் சந்தித்து , ஒரு கேள்வி கேட்டனர்.

‘ஐயா மனித வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள் எது?’

பகவான் உடனே ஒரே வார்த்தையில் பதிலளித்தார். ‘இஸ்லாம்’ . அதுவே ‘சமாதானமாகும்’. எல்லாம் வல்ல அல்லாவிடம் சரண் புகுதலே சமாதானமாகும், சாந்தியைக் கொடுக்கும்.’

இந்த இஸ்லாம் என்ற சொல்லுக்குத் தத்துவ ரீதியான பெரிய விளக்கமே எழுதலாம்.

வந்த இஸ்லாமிய அன்பர்கள் பகவான் சன்னிதானத்தில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தனர்.

‘இவர் ஒரு சாதாரண சன்னியாசி அல்ல. இறைவனைத் தியானித்து அவருடைய அருளைப் பெற்றவர்’ எனத் தெளிவடைந்து அவரைப் போற்றி விட்டு அங்கிருந்து அகன்றனர்.

‘ஆறுகள் எல்லாம் முடிவில் கடலைப் போய்ச் சேர்வதுபோல, பல சமயங்களும் நம்மைக் கடவுளிடம் சேர்ப்பிக்கவே ஏற்பட்டவை’,. என்பது ஆன்றோர் வாக்கு.