துவாரகா கவிதை

இங்கே மட்டும் காவிகளில் பூக்கின்றது தாமரை

வெண்தாமரையில் வீற்றிருந்தவளின்
வீணை சுரமற்று ஒளிக்கிறது

இரத்தச் சிவப்பாகி விட்டன
இதழ்களும் நாக்குகளும்

காவிகளில் உருவாகும் ரெடிமேட் துறவிகளை பார்க்கிறேன்

காவியும் கருணையின் நிறம் என்று சொன்னவர்களைத்தான் காணவில்லை

கடவுள்கள் குட்டியானையில்
பயணிக்கிறார்கள்

இங்கே வெண்தாமரைகளின் விதைகள் அழிக்கப்பட்டு விட்டன
புத்தன் துறவு பூண்ட போது
உடுத்தியிருந்த உடைகள்
அவிழ்க்கப்பட்டு விட்டன

இயேசு பிறந்த இடத்திலும்
இரத்தச் சகதியில்
மண்டை ஓடுகள்

இங்கே மண்டை ஓடுகள்
எதோ கடவுளின் பெயரை
உரத்து கத்துகின்றன

எனது சொற்களனைத்தும்
சோதியாகின்றன
சோதி வடிவாய்
நான் உச்சியில் ஏந்தும்
வெண்தாமரை விளக்கொளியில்
காற்றில் பரவும்
எனது சொற்களின் வாசம்

பாவம் இவர்கள்
இங்கே அறிந்தே
செய்யப்படும் எல்லா செயல்களையும்
மாற்றுவோம்
எனது சொற்களை
காற்றில் இரைத்து விடுங்கள்


17.10.2023

One Comment on “துவாரகா கவிதை”

Comments are closed.