சசிகலா விஸ்வநாதன் கவிதை

(அழகியசிங்கரின் என்பா)

பத்து கரங்களிலும்
பத்து ஆயுதம்

தாங்கி, பத்தியுடன்
முக்தி வேண்டுபவர்க்கு

பரிவுடன் பத்ம கமல சரண்
அளிக்கும் பரமே கதி.


17-10-2023