யார் மீது போடலாம் பழியை/சு பொ அகத்தியலிங்ம்

ஒவ்வொரு நாளும்
நடை பயிற்சியின் போது
கடந்துபோகும்
தண்ணீர் லாரிகளின் எண்ணிக்கை
கூடிக் கொண்டே போகிறது

ஒவ்வொரு தெருவிலும்
இரவும் பகலும்
ஆழ்துளைக் கிணறு தோண்டும்
இயந்திரத்தின் இரைச்சல்
கேட்டுக் கொண்டே இருக்கிறது

வீட்டின் பின்புறமுள்ள
சில நூற்றாண்டு பழமையான ஏரி
ஆலை ரசாயனக் கழிவுகள் நிரம்பி
நாற்றமெடுக்கிறது

குடிநீர் கேன் விநியோக
சப்தமும் காட்சியுமாய்
ஒவ்வொரு நொடியும்
நகர்ந்து கொண்டே இருக்கிறது

வானம் தினசரி இருண்டு
நாலு தூறல் போட்டுப்
போக்கு காட்டிப்
போய்க் கொண்டே இருக்கிறது

குளிர் நகரத்தில்
ஸ்வெட்டர்கள்
பீரோவில் அடைபட்டுவிட்டன
ஏசியும் ஃபேனும்
மின் நுகர்வை
அதிகரித்துக் கொண்டிருக்கின்றன

பழியை யார் மீது போடலாம்…

மூளையைக் கழற்றி வைத்துவிட்டு
மூக்கையும் கண்ணையும்
தீட்டிக் கொண்டிருக்கிறோம்
நாக்கு தடித்துக் கொண்டிருக்கிறது

சரி, சரி
யோசித்தது போதும்
தண்ணீர் லாரியில் அடிபடாமல்
தெருவில் நடக்கப் பழகு, முதலில்!

  • (தற்சமயம் பெங்களூருவில் வசித்து வரும் சு பொ அகத்தியலிங்கம், தீக்கதிர் முன்னாள் ஆசிரியர், எழுத்தாளர் எழுதிய இந்தக் கவிதை,
    யார் மீது பழி போடுவது என்ற தலைப்பில் தீக்கதிர் (22 10 2023) ஞாயிறு இணைப்பு வண்ணக்கதிரில் வந்திருப்பது.
    அவரது மின்னஞ்சல் முகவரி: agathee2007@gmail.com)

2 Comments on “யார் மீது போடலாம் பழியை/சு பொ அகத்தியலிங்ம்”

  1. Yes, in Bengaluru, water. Scarcity is on the higher side. Walking in the midst of traffic is a herculean task.

    இங்கு நடப்பதை துல்லியமாக எடுத்துக காட்டிய கவிஞர் அகத்தியலிங்கம் அவர்களுக்கு பாராட்டுகள்

  2. மூளையைக் கழற்றி வைத்துவிட்டு
    மூக்கையும் கண்ணையும்
    தீட்டிக் கொண்டிருக்கிறோம்
    நாக்கு தடித்துக் கொண்டிருக்கிறது
    மக்களின் ஒழுக்கம் பண்பாடு குரைந்து வருகிறது
    பழியை யார் மீது போடலாம
    என்ற என்னத்துடனே மனிதமனம் அலைகிறது
    மனிதத்தை தொலைத்து பயனிக்கிறோம்

Comments are closed.