உமா ஷங்கர் ஜோஷி/ காந்திஜியின் வாழ்வில் இருந்து சில கதைகள்

கதை : 1

தமிழாக்கம் : ஜெயலட்சுமி

பயங்கர இருள் சூழ்ந்த இரவு. மோகனுக்கு ஏற்கனவே பேய் பிசாசு என்றால் பயம். தனியாக இருளில் போக நேர்ந்தால் எந்த மூலையில் இருந்து பூதமோ பிசாசு எதிரில் வந்து குதிக்குமோ என்று ஒரே நடுக்கம். அன்று இரவோ, எதிரில் உள்ளவர்களின் முகம் கூடத் தெரியாத காரிருள். மோகனுக்கோ அறையிலிருந்து வெளியே போக வேண்டும். வெளியே அடியெடுத்து வைத்தால், கால் தரைக்குள் புதைந்து விட்டாற்போல. நெஞ்சு. எழும்பமாட்டேன் என்கிறது. கொல்லன் உலைத் துருத்தியைப் போல நெஞ்சு எழும்பி எழும்பி அடங்கியது. பக்கத்து வீட்டின் பழைய ஆயா ரொம்ப நின்று கொண்டிருந்தாள். சிரித்தவாறே ” என்ன மோகன்?” என்று கேட்டாள்.

“எனக்கு பயமாக இருக்கிறது” என்றான் மோகன்.

“அட அசடே… என்ன பயம்?”

“எவ்வளவு இருட்டு பாரேன். பேய் பிசாசு ஏதாவது வந்துவிட்டால்?..” மோகன் மெல்லிய குரலில் கிசுகிசுத்தான்.

ஆயா மோகனின் தலையை அன்புடன் வருடி, “இருட்டைக் கண்டு யாரேனும் பயப்படுவார்களா? ராமன் பெயரைச் சொல்லிக்கொண்டு நட. பூதமோ பிசாசோ உன் பக்கம் வராது. தலைமுடியைக்கூட யாராலும் அசைக்க முடியாது. உன் விரல் நகத்துக்குக் கூட யாராலும் தீங்கிழைக்க முடியாது. ராமன் உன்னைக் காப்பான் என்றாள்.

ரம்பா சொன்னதைக் கேட்டு மோகனுக்கு துணிவு வந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு, ராமனின் பெயரைக் கூறிக் கொண்டே முன்னே நடந்தான்.

அன்றிலிருந்து மோகனின் மனதில் அச்சம் குறைந்தது. தான் தனியாக இருக்கிறோம் என்ற உணர்வையே விட்டுவிட்டான். ராமன் அருகில் உள்ள வரையில் தனக்கு யாரும் தீங்கிழைக்க முடியாது என்று மோகன் நம்பினான்

இந்த நம்பிக்கையே காந்திஜிக்கு அவருடைய வாழ்க்கை முழுவதும் பலன் அளித்தது. இறக்கும்போது ராமன் பெயரே அவர் நாவில் இருந்தது.

நன்றி :

(வெளியீடு : இயக்குநர், நேஷனல் புக் டிரஸ்டு இந்தியா, நேரு பவன் , 5 இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, பேஸ் II , வசந்த் குஞ்ச, புதுதில்லி 110070

One Comment on “உமா ஷங்கர் ஜோஷி/ காந்திஜியின் வாழ்வில் இருந்து சில கதைகள்”

Comments are closed.