முற்றத்தில் சில சொற்கள்இறைந்து கிடந்தன../கலைச்செல்வி

சமையலறையில்
சில சொற்கள்
வாசத்தோடு கிடந்தன

சமையல் அறை
படுக்கை அறை
வாவியிருந்த புழக்கடை..
வாசல் தெளித்த
வெளித்திண்ணை
வாகாய் காற்று
வாங்கும் தோட்டம்.

எங்கும்
எல்லாவற்றிலும்
பழையதும் புதியதுமாய்
பல சொற்கள்
பல வண்ணத்தில்
இறைந்து கிடந்தன..

நானொரு கவிதை
செய்யவேண்டும் நளினமாய்
சொற்களைமட்டும் வைத்து
என்ன செய்வேன் நான்?

அதில் கொஞ்சம் நீ வேண்டும்
அதைக்கொஞ்ச நீ வேண்டும்.
வந்துவிடு…..