குமரித்துறைவன்/மனக் கழுதை

கசடதபற டிசம்பர் 1970 – 3வது இதழ்

காலச் சேற்றை
கால் பட நடந்து
பாசப் பள்ளம்
பாதி தாண்டி
உறவு மணலில்
ஒட்டிய தெல்லாம்
உதறித் தள்ளி
வாழ்க்கை ஆற்றை
வறுமைச் சுமையுடன்
ஆவலாய் நீந்தி
அமைதி துறையில்
அழுந்த தேய்த்து
சுருக்கென மூழ்கினால்
ஒரே எண்ண நுரை
கரைந்தது சோப்பா
அழுக்கா