பீட்டர் செர்ச்சஸ்/உங்கள் வலது கையை உயர்த்துங்கள்

தமிழில் : க.மோகனரங்கன்


உன் வலது கையை உயர்த்து, என்றாள்.
நான் என் வலது கையைத் உயர்த்தினேன்.
உன் இடது கையை தூக்கு, என்றாள்.
நான் என் இடது கையைத் தூக்கினேன்.
என் இரண்டு கைகளும் மேலே இருந்தன.
வலது கையை கீழே விடு, என்றாள். கீழே விட்டேன்.
இடது கையை கீழே போடு, என்றாள்.
நான் செய்தேன்.
உன் வலது கையைத் தூக்கு, என்றாள்.
நான் கீழ்ப்படிந்தேன்.
உன் வலது கையை கீழே வை. நான் செய்தேன்.
உன் இடது கையை உயர்த்தவும்.
நான் அதை உயர்த்தினேன்.
உன் இடது கையை கீழே போடவும். நான் செய்தேன். அமைதி.
நான் அங்கேயே நின்றேன்,
இரண்டு கைகளையும் கீழே இறக்கி, அவளுடைய கட்டளைக்காகக் காத்திருந்தேன்.
சிறிது நேரம் கழித்து நான் பொறுமையிழந்து, அடுத்து என்ன என்றேன்.
இப்போது உத்தரவு போடுவது உன் முறை, என்றாள்.
சரி, என்றவன் சொன்னேன்.
இப்போது என் வலது கையை உயர்த்தச் சொல்.