பி.ஆர்.கிரிஜா/எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்

(வகை : அழகிய சிங்கரின் என்பா !)

1.

எல்லோரும்
நலமாக இருக்க வேண்டும்

தர்ம சிந்தனை
வளர வேண்டும்

அனைவரும் கல்வி
கற்க வேண்டும்

இயற்கை பேண வேண்டும் !


2.

எல்லோரும் நலமாக
இருக்க வேண்டும்

ஏற்றத்தாழ்வு அறவே
நீங்க வேண்டும்

சுற்றுச்சூழல் மாசின்றி காக்க வேண்டும்

பாரினில் அமைதி வேண்டும் !

3.

எல்லோரும் நலமாக
இருக்க வேண்டும்

அனைத்து ஐந்தறிவு
உயிர்கள் உட்பட

மனமார்ந்த ஒத்துழைப்பு
அளித்திடத் தயார்

ஒருநாள் அதுவும்
கைகூடும் !

4.

எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்

உலகத்தினர் அனைவரும் இவ்வாறு நினைத்தால்

புவியே சொர்க்கமாய் காட்சி தரும்த

மானுடம் தழைத்து ஓங்கும் !

5.

எல்லோரும் நலமாக இருக்க வேண்டும

என்ன ஒரு உயரிய சிந்தனை !

நான் மட்டும் நினைத்தால் போதுமா ?

நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் !

6.

எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்

மாற்றுக் கருத்து வேறு உண்டோ

இறையருள் இருந்தால் இதுவும் சாத்தியம்

அன்பே இதற்கு ஆதாரம் !