பகவானது பள்ளி ஆசிரியர்/சீவ.தீனநாதன்

(ரமண விருந்து என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது)

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் மதுரையில் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். வேங்டராமன் என்பது அவரது என்பது அவரது பள்ளிப் பெயர்.

16 வயதில் ஞான நிலை எழுதியவர், ‘பள்ளிப்படிப்பு ஞானம் தருமா ?’ என்று கூறி, ‘என் அப்பன் அண்ணாமலையான் அழைக்கிறான், ‘ என்று திருவண்ணாமலைக்கு வந்து தவயோகி ஆனார்.

வேங்கட்ராமன் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிளா னதை அறிந்த அவரது பள்ளி வகுப்பாசிரியர் பகவானது ‘நான் யார்?’ என்ற விசாரம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள விரும்பி திருவண்ணாமலைக்கு வந்து, பகவானை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து உட்கார்ந்தார்.

பகவான் தமது பழைய ஆசிரியரைப் புன்முறுவல் பூத்தவராகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவ்வாசிரியர் மெதுவாகக் கேட்டார். ‘பகவானே! ‘நான் யார்? விசாரம் ‘ எப்படி செய்வது?’ புன்வருவலுடன்.
பகவான் ஹாலில் உள்ள அடியார்களைப் பார்த்துக் கூறினார்.

‘இதை கேளுங்கோ ! இந்த வாத்தியார் பள்ளிக்கூடத்தில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல்தான், நான் படிப்பை விட்டு விட்டு இங்கே ஓடி வந்தேன்; இவர் என்னடான்னா இங்கேயும் என்னைத் துரத்திக்கொண்டு வந்து கேள்விகள் கேட்கிறார், பாருங்கோ.

பகவானின் அன்பு கலந்த இந்த ஹாஸ்யத்தை அவ்வாசிரியர் உட்பட அனைவரும் ரசித்துப் பலமாக சிரித்தனர்.

எத்தனை அழகான ஹாஸ்யம்! பகவான் எத்தனை எளிய சும்பாவம் கொண்டவர்.