27/10/23 கவி அரங்கத்தில் படித்த முதல் கவிதை

பூமியும் வானமும் ஒன்றை ஒன்று பிணைக்கின்ற இந்த நேரம் அதி காலையா சாயும் மாலையா?
அந்த மலையின் உச்சியில் மினுங்கும் தீபம் பகலவனின் கதிர்
விழிப்பா, உறங்கிய வியாழனின் கண் முழிப்பா?
உள்ளே உள்ளே கேட்கும் இந்த ஒலி ஆத்மாவின் குரலா மனதின் பதிவா?
கேட்காத அந்த கீதம்
ஒலி க்கையில் இவைகளும் புரியக்கூடும்
அதைச் சொல்லும் மொழி இருந்தால்
