
தியானம் செய்
மனத்தை ஒருநிலைப்படுத்த…
நவின்றார் என் ஆசான்.
செல்பேசியை அணைத்தேன்.
வாசல் கதவை
சார்த்தி பூட்டினேன்.
முகம் கழுவினேன்;
உறக்கம் போக.
மனம் அமைதியுற,
ஒன்று முதல் பத்து வரை எண்ணினேன்.
விளக்கை மங்கலாக்கி,
மணையில் மலராசனத்தில்,
அமர்ந்தேன்; கண்மூடி…
எங்கும் ஒலியற்ற
நிசப்தம்….
மனம் குவியுமா?
ஆ!
இது என்ன?
மனதின் ஓசை
ஓலமாய் என் செவியில்…
நேற்றைய நிகழ்வுகள்!
இன்றைய கடமைகள்!
நாளைய எதிர்பார்ப்புகள்!
என்னால் இயலாது…
இது என;
அறிந்து கொண்டு
அமைதியாய்
தொலைக்காட்சியை
காண.. மனது
லயித்தது.. அதில்.
29-10-2023
