எஸ்ஸார்சி/துப்பாக்கி

இணையக்கால கவிதை
11
29/10/23

வெள்ளையோ கருப்போ
மாநிறமோ
எப்படி இருந்தாலென்ன
தினம் தினம் அமெரிக்காவில்
நூற்றிஇருபதுபேருக்கு
மேல் சுடப்பட்டுச்
செத்துப்போகிறார்கள்
அவர்களே கணக்கும் தருகிறார்கள்
உப்பு புளி மிளகாய் போல்
எந்தத் துப்பாக்கியையும்
அமெரிக்காவில் வாங்கிவிடலாம்
துப்பாக்கி வியாபாரத்துக்கு
தடைவிதிக்கலாமே
இங்கிருந்து யோசனை
சொல்கிறாய் நீ
அதெப்படிச் சாத்தியம்
துப்பாக்கித் தயாரிக்கும்
முதலாளிதானே
அமெரிக்க நாடாளுமன்ற
அஸ்திவாரமும் தூணும்.