ப.மதியழகன்/நீயா? நானா?

சொல்புதிது இணையவழி கவியரங்கம்


கடவுள் வியாபாரம்
பலகீனமானவர்களையே
பங்குதாரராகக் கொண்டுள்ளது
நீ விலகிக் கொண்டால்
அந்த இடத்தை
வேறு ஒருவர் நிரப்ப
தயாராய் இருப்பர்
பதினாயிரம் கடவுள்களும்
பத்தவில்லை இவர்களுக்கு
அணுவிலிருந்தே போட்டி
ஆரம்பமாகிவிடுகிறது
தொழில்நுட்ப யுகத்தில்
முகம் தெரியாதவர்களோடெல்லாம்
போராட வேண்டி இருக்கிறது
நீங்கள் கோழைகள்
நம்பாதத்றகுத்தான் தைரியம் தேவை
நம்புவதற்கல்ல
வெளி சுத்த வெளி
இறைஞ்சும் காற்று
சுடரும் ஒளி
அறையிருட்டில்
மனிதப் பிசாசுகள்
சாவுடன் பேசிக் கொண்டிருக்கின்றன
அதுதான் கடவுள் என்று