தேவர் மகான்/எஸ்ஸார்சி

31/10/23

சாதிமதம் கடந்த மகான்
தேவர் முத்துராமலிங்கரைப் போற்றுவோம்
தெய்வீகத்தையும் தேசத்தையும்
தன்னிரு கண்களாகக் கொண்டாடிய
ஆழம் கூடிய அற்புதம்
உணவால் சைவத்துக்கு மாறிய
அகவினத்தார்
வள்ளல் இராமலிங்கரை
ஆராதித்த பெருமகன்
நேதாஜிக்குத் தமிழ்மண்ணில்
வீரர்களைத்திரட்டிய
தேசபக்தர்
மதுரை மீனாட்சி ஆலயத்தில் அரிசனங்கள்
பிரவேசிக்க முன்கையெடுத்த
வைத்யநாதய்யருக்கு அரண்
தேசப்பிரிவினையின்
போது
தமிழக இசுலாமியர்
நம்மோடு இருப்பர்
உரக்கக்குரல் கொடுத்த நேர்மையாளர்
மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்
நம்ப முடிகிறதா உங்களால்
தேவருக்குச் சரியானதொரு
அரசியல் வாரிசுக்கு
எத்தனைக்காலமாய்
தவம் கிடக்கிறது தமிழகம்.