ஆர். வத்ஸலா/தவறுதலாக ஒரு விடுதலை

இன்றைய இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை

சாலை ஓரத்திலமர்ந்து
விரித்த விழிகளால்
வருவோர் போவோரை
வேடிக்கை பார்த்துக்கொண்டு நான் –
அப்பாதையில் பயணிக்க
குறிப்பிட்ட ஒரு சிலருக்கே சீட்டு என்பது போல

மற்றவர் போலல்லாமல்
நின்று
நீ என்னை திரும்பிப் பார்த்தாய்
எனக்கு உரமூட்டி
வேரூன்றிப் போன என் கால்களை
அதிசயமாக நடக்க வைத்தாய்

ஆறும் மலையும்
குட்டையும் குன்றும்
எல்லாவற்றிற்கும் மேலாக
அகண்ட இந் நீலவானம்

இத்தனையும் எனக்குக் கிடைக்கக் காரணமான
உனக்கு
நன்றி சொல்ல நினைக்கையில்
கவனித்தேன் –
உன் கையில்
வெயில் பட்டு மின்னும் தங்கச் சங்கிலி
என் கால்களுக்குமாய் மின்னம்பலம் தீபாவளி மலர் 1999