
வாசிப்பது சிறகா .
ஆளில்லாத வீடுகளிலிருந்து
ஆட்களில்லாத வீதிகள் வழி
ஆட்களேயில்லாத ஊரை விட்டு
வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் ஆட்கள்
ஆட்களே யில்லா த ஊருக்கு
ஆட்களில் லாத வீதிகள் வழி வந்து
ஆளில்லாத வீடுகளில் நிரம்புகின்றார்கள் ஆட்கள்
ஆட்கள் நிறைந்த வீடுகளிலிருந்து
ஆட்கள் நிறைந்த வீதிகள் வழி
ஆட்கள் நிறைந்த ஊரை விட்டு
வெளியேறிக்கொண் டிருக்கின்றன
வீடுகள் வீதிகள் ஊர்கள்.
