ஞானக்கூத்தன்/சொர்க்கவாசல்

பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியன்று சொர்க்க வாசலென்று வடக்கில் ஒரு கதவைத் திறக்கிறார்கள்
சொர்க்க வாசல் வழியாய்
மக்கள் பரவசப்பட்டுப் போகிறார்கள்
வீட்டை விட்டு நள்ளிரவில் வெளியேறிக்
கோயில் கதவு முன் காத்திருக்கிறார்கள் பால்ய காலத்தில் நானும் பலமுறை சொர்க்கவாசல் வழி வெளியே வந்தேன். புல்லும் பூண்டும் நெருங்கி முள்ளும்
ஏளனம் தும்பைப் பூக்களும்தான்
நான் பார்த்தேன். ஆனால்
போகவும் வரவும் கோயிலுக்கு
ஒரே கதவென்ற கட்டளையை மாற்றிவிட்டது சொர்க்கவாசல்.

(31.10.2023 அன்று இணைய கால கவி அரங்கில் வாசித்த கவிதை)