நீங்களும் படிக்கலாம்….23/அழகியசிங்கர்

கோட்பாடு ரீதியாக ஒரு புத்தகத்தை அணுகுவது எப்படி?

     நீங்களும் படிக்கலாம் என்ற தலைப்பில் நான் படித்தப் புத்தகங்களைக் குறித்து  என் கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன்.23 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன்.  உண்மையான காரணம் நான் படித்தப் புத்தகத்தை மறக்கக் கூடாது என்பதுதான். அதே சமயத்தில் நான் எழுதியதைப் படித்து ஒன்றிரண்டு பேர்கள் அப் புத்தகத்தை வாங்க வேண்டுமென்றும் விரும்புகிறேன்.  

இன்றைய சூழ்நிலையில் தமிழில் புத்தகம் பற்றிய அறிமுகம் சரியாகக் கிடைப்பதில்லை. அதனால் என்னால் முடிந்ததை முகநூலில் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.

சமீபத்தில் எம் டி முத்துக்குமாரசாமியின் நிலவொளி எனும் இரசசிய துணை என்ற கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும் என்ற புத்தகத்தைப் படித்து எழுதியிருந்தேன். இப்புத்தகத்திற்கான என் மதிப்புரை 5 பக்கங்கள் போய் விட்டது. முகநூலில் பதிவு செய்வது சரியாக வராது என்று தோன்றியது. மலைகள்.காமில் அனுப்பி, மலைகள்.காம் பிரசுரித்தது. பொதுவாக என் நண்பர்கள் சிலர், புத்தகங்களைப் படித்துவிட்டு அடுத்தப் புத்தகம் படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

நாம் நினைத்தால் கூட சுலபமாக ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு எழுதி விடவும் முடியாது. அதற்கான கடின உழைப்பு தேவை. படித்து முடித்தப்பின் என்ன எழுதப் போகிறோம் என்ற யோசனைப் போய்க்கொண்டே இருக்கும். நான் மூன்று விதமாக இதைப் பார்க்க விரும்புகிறேன். முதல் ரகம் : ஒரு சில புத்தகங்களை நம்மால் படிக்கவே முடியாது. இதுமாதிரியான புத்தகங்களைக் குறித்து எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. இரண்டாவது ரகம் : ஒரு சில புத்தகங்களை நம்மால் படிக்க முடியும். அப்படிப் படிக்கிற புத்தகங்கள் குறித்து நம் கருத்துக்களையும் தெரிவிக்க முடியும். அப் புத்தகத்தில் நமக்குத் தெரிகிற குறைகளையும் சுட்டிக் காட்டமுடியும். ஆனால் எழுதியவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. மூன்றாவது ரகம் : சில புத்தகங்கள் படிப்பவரை சுண்டி இழுத்து விடும். அதுமாதிரியான புத்தகங்களைப் படிக்கும்போது நம்மால் குறைகளைக் கண்டுபிடிக்கவே முடியாது. படிப்பவர் ஆசிரியரிடம் சரணாகதி அடைந்து விட வேண்டியதுதான்.

எம்டி முத்துகுமாரசாமியின் புத்தகம் மூன்றாவது ரகத்தைச் சார்ந்த புத்தகம். இப் புத்தகம் மூலம் நான் பல விஷயங்களை அறிந்து கொண்டேன். அவருக்கு என் நன்றி. இன்று நான் எழுதியதை என்னுடைய navinavirutcham.in ல் பதிவு செய்துள்ளேன். படிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எழுதியதின் சில பகுதிகளை இங்கு தருகிறேன்.

“மௌனிக்கும் போர்ஹெஸ÷க்கும் உள்ள பல ஒற்றுமைகளைப் பற்றி யாரும் எழுதியிருக்கிறார்களா என்பதை தேடிப் பார்க்கிறார் எம்டிஎம். தன் அடையாளம், பிறன்மை என்பதன் விளையாட்டைத் தன் கலையின் மையமான சரடாக மௌனியிடமும், போர்ஹெஸ÷டமும் காண்பதாக குறிப்பிடுகிறார். நான் மௌனியை மட்டும் படித்திருக்கிறேன். போர்ஹேûஸ அவ்வளவாய் படித்ததில்லை. ஆதனால் எம்டிஎம் இந்தக் கட்டுரையைப் படித்தப்பிறகு போர்ஹெஸ் எழுதிய எழுத்துக்களையும் படிக்க விரும்புகிறேன். எம்டிஎம்மின் இந்தக் கருத்து எவ்வளவு தூரம் உண்மையானது என்று அறியவும் விரும்புகிறேன்.”

“இரசனை விமர்சனம் என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அரசியலை அப்படியே இலக்கியத்திற்குள் கொண்டு வருகிய விமர்சன முறையாகும்ý என்று சாடுகிறாரர் எம்டிஎம். இதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி என்று விவரமாக சொல்ல வேண்டும்.”

“காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம் என்ற கட்டுரையில், தமிழில் சுந்தர ராமசாமிக்குக் காப்ஃகாவின் படைப்புகளின் பெரிய பிரமிப்பு இருப்பதாக குறிப்பிடுகிறார்.
ஏனெனில் தந்ûதையுடனான மகனின் உறவு என்பது பௌதிக தந்தையுடனான உறவு மட்டுமல்ல. அது மரபு, அரசு, குரு, அதிகார பீடம், விதி, தேசம், சட்டம் ஆகியவற்றோடு ஒருவன் கொள்கிற உறவின் தன்மையையும் சொல்லக்கூடியது என்கிறார்.”

நான் எழுதிய முழு கட்டுரையை navinavirutcham.in போய்ப் படிக்கவும்.

நிலவொளி எனும் இரகசிய துணை – கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும் – எம் டி முத்துக்குமாரசாமி – பக்கங்கள் : 263 – பதிப்பு : 2014 – விலை : ரூ.200 – வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, திருச்சி மாவட்டம், தொலைபேசி : 0432 273444
(நன்றி : மலைகள்.காம்)