ரூமி கவிதை

மொழி ஆக்கம் : க.மோகனரங்கன்

நான் வியந்து நிற்கிறேன்
இந்த ஆயிரம் ‘என்’களில்,
‘நான்’ என்பது யார்?
என் அழுகையைக் கேள்,
என் குரலை மூழ்கடிக்காதே!
நான் உன்னைப் பற்றிய எண்ணத்தால் முழுமையாக நிரம்பியிருக்கிறேன்.
உடைந்த கண்ணாடியை
என் பாதையில் பரப்பாதே
நான் அதை நொறுக்கி
தூசியாக்கிடுவேன்.
நான் ஒன்றுமில்லை,
உன் உள்ளங்கையில் இருக்கும்
ஒரு கண்ணாடி மட்டுமே,
உன் இரக்கம், உன் வருத்தம்,
உன் கோபத்தையே
அது பிரதிபலிக்கிறது.
நீ ஒரு புலின் இதழாக அல்லது
ஒரு சிறிய பூவாக இருந்தால்
உன்னுடைய நிழலில்
எனது கூடாரத்தை அமைப்பேன். உனது இருப்பு மட்டுமே
வாடிய என் இதயத்தை உயிர்ப்பிக்கிறது.
நீ உலகம் முழுவதையும்
ஒளிரச் செய்யும் மெழுகுவர்த்தி
உன் ஒளிக்கு
நான் ஒரு வெற்றுக் கூடு.