எஸ்ஸார்சி/நன்றி சொல்லி முடியுமா

இணையக்கால கவியரங்கம்
15
எஸ்ஸார்சி வாசித்த கவிதை

.

செய்த உதவிக்கு நன்றி என்று எழுதுகிறோம்
நன்றி நன்றி என்று
உரக்கச் சொல்கிறோம்
உதவி சிறிதெனினும்
நன்றி மறத்தல் நன்றன்று
பொய்யாமொழி அல்லவா.
பொழியும் மழைக்கும்
காக்கும் கதிரோனுக்கும்
உயிர்வளி அருளும்
விருட்சங்களுக்கும்
சோறு போடும் உழவனுக்கும்
தம்மை உருக்கி
நம்மை ஈனும் தாய்மார்களுக்கும்
நன்றி சொல்லி முடியுமா?
நெஞ்சிருக்கும்வரை
நினைவில் வைத்துப் போற்றலாம்
ஈடாகாது அப்படியும்
அவர்களிடம் நாம் பெற்றகடன்
பெற்ற தாயோடு எண்ணக்கடவுளும்
இல்லைதானே.

One Comment on “எஸ்ஸார்சி/நன்றி சொல்லி முடியுமா”

Comments are closed.