சசிகலா விஸ்வநாதன்/என் அம்மா அலுவலகம் போய் வரட்டும்

இனிய மாலை வணக்கம்.
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
வியாழன்
மாலை மணி 6-15
இணைய கால கவியரங்கம்
கவிதையின் தலைப்பு

குட்டிப் பெண் ஒருத்தி
பட்டு போல்
கிட்டே அமர்ந்தாள்.
வாட்டமான முகத்துடன்….

ஏனம்மா? என்று கேட்க;

என் அம்மா இன்று
லண்டன் போயுள்ளாள்.
ஒரு வாரம் கழித்துதான் வருவாள்.
;அரையாண்டு தேர்வுக்கு இருக்க மாட்டாள்
அதுதான் … என்று இழுத்தாள்

“உனக்கு அம்மா
அலுவலகம் போவது,
விருப்பம் இல்லையோ?” வினனேன்
“பட்”என் பதில்…
“பாட்டி! அப்படி இல்லை
பிடிக்கும்- பிடிக்காது
இரண்டும்;
அது எப்படி?

நான் கேட்க
அலுவலகம் போனால்,
என் படிப்பிற்கு, அம்மாவால் உதவி செய்ய முடியாது…
அதனால் பிடிக்காது!
ஆனால்;
அம்மாவுக்கு வீட்டில்
மதிப்பு மரியாதை கூடி
நல்ல பேர் கிடைக்கிறது…
அதனால் பிடிக்கும்!

அசந்து விட்டேன்!
எட்டு வயது சிறுமியின் கூர்ந்த
சமூக பார்வை,
சிந்தனைத் திறன்;
வாயடைத்து, சமைத்து விட்டேன்.


2-11-2023