
ஆறேழு நாட்களாக அக்கா குருவிகளைக் காணவில்லை
அவற்றின் கிய்யா முய்யா
சத்தமும் இல்லை கொஞ்சம் கவலையாக இருக்கிறது.
வேறு இடம் போயிருக்கும் அல்லது
போக வேண்டாமென்று தீர்மானித்திருக்கும்
எல்லா இடங்களையும் எல்லோராலும் எப்போதும் நிரந்தரமாக நிரப்ப முடிவதில்லை
என்பது வாழ்வின் போக்கு
நேற்று காலை
ஒரு மைனாவும்
மாலையில் இரண்டு
தேன் சிட்டுக்களும் வந்துவிட்டு போனது
3.11.2023
