
புத்தகத்தை கையில் பிடித்தபடி நின்றிருக்கிற
தலைவரின் சிலையின் கீழ்
அதிகாலையிலேயே
அசந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்
நாட்டின் குடிமகன்.
உறக்கம் என்றால்
உலகை மறந்த மயக்கம்
மற்றபடி ஒன்றுமில்லை.
பாவம்
தலைவர்க்குத் தான் எத்தனை கடினமான வேலைகள்.?
புத்தகத்தை படிக்க வேண்டும்.
படித்ததை மக்களுக்குச் சொல்ல வேண்டும்
சொன்னபடி நடக்கிறார்களா என்று பார்க்கவேண்டும்
பின் கடைசியாக படுத்திருப்பவனையும் எழுப்ப வேண்டுமே.
5.11.2023
