சுரேஷ் ராஜகோபால்/பக்தி

இணையக் கால 19வது கவி அரங்கம் 06/11/2023 – கிழமை திங்கள்
பக்தி தலைப்பில் சுரேஷ் ராஜகோபால் தாம்பரத்திலிருந்து படிக்கும் கவிதை , நேரம் மாலை 06.10.

எது என்றபோது
அதுதான் என்றாய்
இதன்மீது இத்தனை ஆசையா?
தெரியவில்லை இத்தனை நாள்
புரியவில்லை எதுவும் இத்தனை நாள்

அனுபவிக்கும் போது
தெரிந்தது உண்மை
புரிந்தது

பட்டவர்த்தனமாகப்
புரிந்த பின்னே மூழ்கினேன்
செரித்து உள்ளே
பக்குவம் அடைந்தேன்

பக்தியில் இத்தனை
சக்தியா? நெகிழ்ந்தேன்
பின்னர் மகிழ்ந்தேன்

புரிந்த பின்னர்தான்
மூழ்கினேன் தெய்வ ஆராதனையில்.

One Comment on “சுரேஷ் ராஜகோபால்/பக்தி”

Comments are closed.