.

நேற்றைய வசவுகளின் வீரியமகற்றி
அடுக்களைக்குள் புகுந்து புறப்பட
தோதாகத்தான் இருக்கிறது.
செய்வதற்கு ஏதுமற்ற தருணங்களில்
நினைவுச் சிறகுகள் படபடக்காது
தற்காத்து விடுகிறது.
மூச்செடுப்பதே முதன்மையாகிப் போக
விருப்பு வெறுப்புகளின் தொகுப்பில்
இலக்குகளை மாற்றுகிறது.
வயதின் முதிர்ச்சியில் முடிவிலியாய்
பல்கிப் பெருகும் மறதியின் வேர்கள்
இதயம் தொடுகையில் சுகம் மட்டுமல்ல
சிறிது சுதந்திரமும் இருப்பது
உணர்ந்தால் மட்டுமே புரியும்.
.
