
இனிய மாலை வணக்கம்.
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது செவ்வாய் கிழமை இணையகால கவியரங்கம்
மாலை மணி 6.15
கவிதையின் தலைப்பு
மௌனம் என்பது
வாய் பேசாமல் இருப்பது
மட்டும் அல்ல;
தவிர்க்க வேண்டிய
நினைவலைகளை
தயங்காமல் தவிர்.
உண்ணா நோன்பு
அது; உண்ணாமல்
இருப்பது மட்டும் அல்ல;
உண்ணும் நினைப்பை ஒழிப்பதும் அல்ல;
உண்ணும் நினைவு
தானே ஒழிவதே.
பேசும் நினைவும்
உண்ணும் நினைவும்,
எண்ணும் நினைப்பும்,
அற்ற
ஒரு விடுதலை உணர்வு.
பதிவாய் பழகிட
மதி கதியாய்
சரணடையும் அமைதியில்.
7-11-2023
