ஹரணி/நியமம்

வேலை செய்பவனே
வேலை செய்கிறான்..

வேலை செய்யாதவன்
வேலை செய்வதில்லை..

வருகைப் பதிவேடு
என்பது வேலைக்கானதில்லை..

அது வேடமிடுவோர்க்கான
நாடக மேடை..

உழைப்பவனுக்கு
உள்ளமே வருகைப் பதிவேடு
மனச்சான்றே கையொப்பம்…

அவனுக்கு ஆண்டவனே
அதிகாரி ஆள்பவனல்ல..

( இன்று வாசித்த கவிதை- இணையக் காலக் கவியரங்கம்).