
இணையக் கால 20வது கவி அரங்கம் 07/11/2023 – செவ்வாய் கிழமை, நேரம் மாலை 06.10
மலர் மாலை தலைப்பில் சுரேஷ் ராஜகோபால் தாம்பரத்திலிருந்து படிக்கும் கவிதை.
கதிரவன் வெளிவந்தான்
காலை புலர்ந்தது
செடியெல்லாம் வண்ண மலர்கள்
வாசம் சுகந்தம் தந்தது
கூடை கொண்டு
மலர் பறித்தான்
நார் எடுத்து
மலர்களை சரமாக்கி
அழகு பார்த்தான்
நாரே தெரியாமல்
மலர் மாலையாச்சு
மாலையில் வாடிய மலரால்
மாலையும் நாராச்சு
இதுவே உண்மை.

👏👏👌🙏