இன்று மாலை வாசித்த கவிதை.

ஏழை நிலவுக்காரி ,எங்கிருந்தோ
வந்த
உறவுக்காரி. அழைக்காமலே
திறந்த
வாசலில் நுழையும் விருந்துக்காரி.
வெள்ளைச் சிரிப்புக்காரி. வேகும்
நெஞ்சம்
தடவி ஒற்றடம் கொடுக்கும்
சிங்காரி.
நீரில்,நிலத்தில் செடி, கொடியில்
நோய்
தீர்க்கும் தைலம் வைக்கும்
மருந்துக்காரி.
தொட்டி நீரில் முகம் காட்டி
அழும்
குழந்தையை சிரிக்க வைக்கும்
மாயக்காரி.
மின்கட்டணம் தராமல்
கதிரவனின்
ஒளி வாங்கி விளக்கெரிக்கும்
ஏமாற்றுக்காரி.
வீதிவழிச் செல்லும்
கள்ளரைக்
காட்டிக் கொடுக்கும் காவல்காரி.
ஆர்ப்பரித்து பனையளவு
அலைக்கை
நீட்டினாலும் கடலரசன்
கையில்
சிக்காத கைகாரி.
மந்திரப் பு்ன்னகையால்
ஒட்டு
மொத்த உலகை வெல்லும்
மோகனக்காரி.

Arumai!🙏👏👌