
000
குடியால் இறந்துபோன அப்பாவுக்குப் போட்ட படையலில் பிடிக்கு
மென்று பீரும் விஸ்கிப்
பாட்டிலும்.
000
ஏன் பறித்தாய் என
செடி கேட்காது பூவும் கேட்காது குத்திய முள்
பேசாமல் கேட்கும்.
000
சமையல் வேலை செயது
கிடைத்த பணத்தில் சவர்மா வாங்கி வந்தான் மகனுக்கு.
000
தூண்டில் போட்டதில் பை நிறைய மீன்கள். கிளம்ப எழுந்திரிக்கையில் எங்கிருந்தோ வந்த பூனைமீன் பையைக் கவ்வி ஓடியது.
000
நிரந்தர வேலை கிடைத்து முதல் சம்பளம் வாங்கி வீட்டிற்கு வந்தபோது அட்டாக்கில்
அப்பா இறந்து போயிருந்தார்.
000
ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை. கிளம்பினான் கொத்தனார் அப்பா வோடு வேலைக்கு ஒத்தாசையாக.
000
இறந்து போன நண்பனின் அம்மாவுக்கு மாலை வாங்கப் பணமில்லை. பாடை தூக்கிய நாலு பேரில் ஒருவனாகத் தூக்கினான்.
000
