
(அழகியசிங்கரின் என்பா.
தீபாவளி)
( 1 )
தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா?
தீர்மானமாக சொல்கிறேன்;
“இல்லை! இல்லை”!
தீபாவளிக்கு என்
வீட்டில் “அல்வா”
மட்டுமே எனக்கு தருவார்கள்!
😃
( 2 )
தீபாவளிக்கு லட்டு
தின்ன ஆசையா?
இருக்கும் விலைவாசியில்
வீட்டில் லட்டு
செய்வது எப்படி?
எப்படியாவது சமாளிக்க;
கடவுள் அருள் வேண்டும்.
(3)
தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா?
ஆமாம்! ஆமாம்!
ஆனமட்டும் முயற்சி
செய்தும், பயண
சீட்டு கிடைக்கவில்லை;
லட்டு ஆசையில் மண்தான்!
( 3 )
தீபாவளிக்கு லட்டு
தின்ன ஆசையா?
தீபாவளிக்கு பட்டு
வாங்கி ஆயிற்று.
கடையிலிருந்து அப்பா வாங்குவார் லட்டு.
பிட்டு தின்னுவோம்; பகிர்ந்து.
(4)
தீபாவளிக்கு லட்டு
தின்ன ஆசையா?
ஆசைதான்! அம்மாவுக்கு லட்டு செய்ய
தெரியுமா; என்பது
எனக்கு சந்தேகம்!
பர்பி தான் இவ்வருடமும்.
( 5 )
தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா?
அதெல்லாம் பட்டணத்து பழக்கம் தான்
எங்கள் கிராமத்தில்
ஒக்காரைதான் செய்வார்கள்.
நகரத்தாருக்கு அது தெரியாது.
8-11-2023
