ஹரணி/தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா

தீபாவளி லட்டுகள் தின்னவோ ஆசையா
தீபாவளி இல்லார்க்கு என்னவாம்- பாவமே
கொண்டாடும் ஆசையை இல்லாரும் கொண்டாடும்
நாளேநல் தீபாவளி பார். 

*********

தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா
தீபாவளிக்கு முறுக்கு தின்னவும் ஆசைதான்
தீபாவளிக்கு அப்பா இறந்து போனார்.
அடுத்த ஆண்டு தின்பேன்.